மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் அப்போதைய தொழில் தொடர்வுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சின் கீழ் 2010 பெப்ரவரி 02 ஆம் திகதி 1640 / 31 ஆம் இலக்க அதி விசேட வர்தமானி அறிக்கை மூலம் 2010 ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து செயற்படும் விதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாட்டின் ஒட்டுமொத்த மனித வலத்தின் வளர்ச்சியைப் பொருட்டு தொழில் முயலுநர்கள் உருவாக்குவதை குறிக்கோளாகக்கொண்ட திணைக்களமாகும்.
இத் திணைக்களத்தால் கீழ் காணும் வேலைகளை புரிவதற்கு உத்தேசிக்கப்படுகிறது,
- தேசிய மனித வலு மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கையினை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்துதல்.
- தொழில் நிர்மாணிப்பு மற்றும் மேம்பாட்டு அலுவல்கள்.
- தோழில் வழிகாட்டல் வழங்கல்.
- தொழில் சந்தையின் தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் வினியொகித்தல்.
- அக் காலத்தின் போது தொழில் இல்லம் மூலமும் நிகழ் காலத்தில் அதனை மக்கள் தொழிற் சேவை (Public Employment Service - PES) இன் மூலமும் புரிந்து வருகின்ற அனைத்து பணிகள்.
இதன் பிரகாரம் இத் திணைக்களத்தால் மனித வலத்தினுள் காணப்படும் சக்திகள் மற்றும் ஆற்றல்கள் போன்றே இதனூடாக தொடர்புப்பட்ட நபர்களுக்கு அடையக்கூடிய மேற்படி நேர்மறையான பெறுமதிகளை இனங்கண்டு இது தொடர்பாக முக்கியமாகக்கூடிய, உயர்தரமானதும் பயனானதுமான பெறுமதியினை இணைத்திட இயலுமான விதத்தில் இவர்களது தொழில்சார் தேவைப்பாடுகள் நிறைவேற்றுவதில் தேவையான வழிகாட்டல், அதனை பொருட்டு தேவையான இட வசாதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வழிவகித்தல், பலதரப்பட்ட தொழில்கள் தொடர்பாக தூண்டிவித்தல், திறன் மேம்பாடு, சிறு பரிமாண கடன் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல், தொழில் துறையினுள் இருக்கக்கூடிய தொழில் பெற்றுள்ளோர் மற்றும் தொழில் எதிர்பார்ப்பாளர்கள் ஒவ்வொருவரை சந்திக்கக்கூடிய மற்றும் நாட்டினுள் தொழில் சந்தை தொடர்பான தகவல்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தேவைகளின் கீழ் அத் தகவல்களை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல வேலைகளை நிறைவேற்றிட முடியும்.
தூரநோக்கு
“உலக மட்டத்திலான இலங்கை தொழிலணி"
பணிப்பிரகடனம்
“பரந்த நிபுணத்துவத்தைக் கொண்ட சுறுசுறுப்பான மற்றும் உலக ரீதியில் போட்டிக்கரமான தொழிலாளர் தொகுதியை கட்டியெழுப்பல் மற்றும் எமது மனித வளங்களின் முழு பலத்தை இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக உபயோகித்தல்.”
2010 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இத் திணைக்களத்தால் இது வரை தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் நிர்மாணிப்பு மேம்பாடு தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏராளமான நிகழ்ச்சிகள் ஊடாக பெரும் எண்ணிக்கைக்கு பயனைப் பெற்று கொடுக்கப்பட்டு இந் நாட்டு பொருளாதாரத்தை வளுப்படுத்தல் பொருட்டு தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக ரீதியில் காணப்படும் போட்டிக்கரமான மற்றும் சவால்களிடையில் அந் நிலைமைகளுக்கு பொருத்தமான விதமாக மற்றும் அதற்கு உட்படுகின்ற வகையிலான தொழில் தொகுதியை ஏற்படுத்துவது இத் திணைக்களத்தின் அடிப்படையான பொறுப்பாகும். இதற்கேற்ப உலகளாவிய ரீதியில் இலங்கைக்கான தொழில் தொகுதியை ஏற்படுத்துவதை தூரநோக்காகக் கொண்ட இத் திணைக்களத்தின் நீண்டகால இலக்குகளை கீழ் காணும் விதமாக வகைப்படுத்த முடியும்.
- உகல ரீதியில் போட்டிக்கரமான, நிபுணத்துவமுடைய மற்றும் பல்வகை திறமைகளுடன்கூடிய இலங்கை தொழிலணியினை உருவாக்கல்.
- வேலையின்மையினை குறைத்தல் பொருட்டு பலதரப்பட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தல்.
- திட்டமிடப்பட்ட, பரிபூரணமான சந்தைத் தகவல்கள் அமைப்பினை எற்படுத்தல்.
மேற்படி குறிக்கோள்களை அடைதல் பொருட்டு முக்கியமாவது கீழ் காணும் இலக்குகளை பூரணப்படுத்திக் கொள்வதே,
- தேசிய மனித வலு கொள்கையை ஏற்பாடு செய்து, கொள்கையை மற்றும் நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.
- திறன் ஒப்பாமை எனும் அமைப்பு ரீதியான வேலையல்லா பிரச்சினையை தீர்த்தல்.
- நிகழ்காலத்து தொழில் தொகுதிக்குரிய மற்றும் எதிர் காலத்தின் போது தொழில் சந்தைக்கு பிரவேசிக்கக்கூடிய சகல இலங்கையர்களுக்கும் சரியான தொழில்சார் திசையை தீர்மானித்துக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தல்.
- மனித வலு திட்டமிடல், அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்னறிவித்தல்.
- முறைசாரா துறையை அபிவிருத்தி செய்தல்.
- தனியார் துறையின் தொழில் வாய்ப்புகள் தொடர்பாக தொழில் எதிர்பார்ப்போரை தூண்டித்தல்.
- சுதந்திர அரச தொழில் சேவையினை வழங்கல்.
- அபாயத்திற்கு உட்பட்டுள்ள குழுக்கள், ஊனமுற்ற நபர்கள் மற்றும் குறைவாக அபிவிருத்தி அடைந்திருக்கும் பகுதிகளில் வாழ்கின்ற நபர்கள் தொடர்பாக மனிதவலு மற்றும் தொழில் ஈடுபாடு சம்பந்தமான வசதிகளை வழங்கல்.
- உலக மற்றும் உள்நாட்டு ரீதியாக சரியான தொழிற் சந்தை தகவல்களை அனைத்து இலங்கையர்களுக்கும் பெற்றுக் கொடுத்தல்.
- உள்நாட்டு மற்றும் உலக தொழிற் சந்தை வளர்ச்சிகளை முன்னறிவித்தல்.
இவ்வாறாக வேலையின்மையை குறைத்தல் மற்றும் நல்ல தொழில்களை ஏற்படுத்தல் எனும் சேவைகளை நிறைவேற்றிடல் பொருட்டு இத் திணைக்களம் தமது மனித வழங்களை பயன்படுத்தப்பட்டு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துகிறது.
- நிர்வாகக் கிளை
- கணக்குக் கிளை
- மனிதவலு திட்டமிடல், அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கிளை
- தொழில் சந்தை தகவல் பிரிவு
- பொதுத் தொழில் சேவைப் பிரிவு
- தொழில் நிர்மாணிப்பு, மேம்பாட்டு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு